என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குற்றவாளி கைது"
துபாயில் இருந்து நேற்று இரவு சவுதி விமானம் ஒன்று சென்னை வந்தது.
இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களுடைய பாஸ்போர்ட்களும் சரி பார்க்கப்பட்டது.
அப்போது ரியாத்தில் இருந்து திரும்பிய நாகராஜ் (35) என்பவருடைய பாஸ்போர்ட் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை.
7 வருடங்களுக்கு முன்பு வாகனம் மோதி ஒருவர் உயிர் இழந்தார். அதன்பிறகு தலைமறைவான அவர் துபாய் சென்றுவிட்டார்.
விபத்து தொடர்பான வழக்கை முடிக்காமல் சென்றதால் நாகராஜ் தேடப்படும் குற்றவாளி என்று விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவித்தார். இது சென்னை விமான நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த நாகராஜ் தேடப்படும் குற்றவாளி என்பதை குடியுரிமை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து, அவரை சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் நாகராஜை விருதுநகர் போலீசார் அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடைபெற்றது.
போரூர்:
மதுரவாயலை அடுத்த நூம்பல் மூவேந்தர் நகரில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். மையத்தில் கடந்த மாதம் 7-ந்தேதி பணம் நிரப்ப தனியார் நிறுவன ஊழியர்களான தேவராஜ், முரளி ஆகியோர் வந்தனர்.
அப்போது அவர்களை மோட்டார் சைக்கிளில் வந்த 2 கொள்ளையர்கள் தாக்கி ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
40 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் இரவு இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய நைஜீரியாவைச் சேர்ந்த அக்யோ மாயே. ஆமு மற்றும் சென்னை மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிரேயா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின்படி மைசூர் சென்ற தனிப்படை போலீசார் அங்கு பதுங்கி இருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெரல் என்பவரை இன்று காலை கைது செய்தனர்.
இதில் அக்யோ மாயே மற்றும் பெரல் இருவரும் சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து பின்னர் பாதியிலேயே வெளியேறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் குட்டை குளத்தைச் சேர்ந்தவர் கலீல் (வயது 24). கடந்த 2015-ம் ஆண்டு இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்காக கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கலீலுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் திண்டுக்கல் - வத்தலக்குண்டு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக ஒரு வாலிபர் சுற்றித் திரிந்துள்ளார்.
அவரை பிடித்து விசாரித்த போது திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த கலீல் என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் ரஷீத்கான். செல்போன் மொத்த விற்பனை கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1-ந் தேதி இவர் வசூலான பணம் ரூ. 70 லட்சத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். ஏழுகிணறு பகுதியில் வந்தபோது மர்ம கும்பல் ரஷீத்கானை வழிமறித்து அரிவாளால் வெட்டி ரூ. 70 லட்சத்தை பறித்து சென்று விட்டனர்.
இது தொடர்பாக ஏற்கனவே 4 பேரை போலீசார் கைது செய்து ரூ. 9½ லட்சத்தை பறிமுதல் செய்து இருந்தனர். இந்த நிலையில் திருவள்ளூரில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான சவுகார்பேட்டையை சேர்ந்த முத்து சரவணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழிப்பறி வழக்கில் மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள். #tamilnews
பஞ்சாப் மாநிலம், அமிர்தரஸ்க்கு உட்பட்ட ராஜாசான்சி கிராமத்தில் உள்ள நிரன்காரி பவன் கட்டிடத்தில் இன்று மத விழா ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற மர்மநபர்கள் அந்த கட்டிடத்தின் மீது கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். சுமார் 10 பேர் காயமடைந்தனர்.
நாட்டின் தலைநகரான டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரங்களின் பட்டியலில் ஒன்றாக தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் 894 கற்பழிப்பு சம்பவங்கள் இங்கு அரங்கேறியுள்ளன.
இந்த ஆண்டில் போலீசார் வெளியிட்டுள்ள தகவலின்படி அன்றாடம் இரு சிறுமிகள் டெல்லியில் கற்பழிப்புக்குள்ளாவதாக தெரியவந்துள்ளது. ஏப்ரல் மாத நிலவரப்படி 282 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டதாக வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கடந்த 13-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 11 வயது சிறுமிக்கு இன்று அதிகாலை திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது.
வலியை குறைக்க மருந்து கேட்பதற்காக தனது வார்டில் இருந்து தனியாக வெளியே வந்த அந்த சிறுமியை அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தவர் பார்த்து விட்டார். மருந்து தருவதாக கூறி தனது அறைக்கு அழைத்து சென்ற அவர் நோயாளி சிறுமி என்பதை கூட நினைத்துப் பார்க்காமல் அவரை கற்பழித்ததாக போலீசில் இன்று காலை புகார் அளிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், ஒப்பந்த பணியாளரான சுமார் 40 வயது மதிக்கத்தக்க குற்றவாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #DelhiESIHospital #11yearoldGirl
திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த செந்தில் குமார் கடந்த 1997-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர். இதில்19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான செல்வம் 20 வருடமாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் நாமக்கலில் அவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். #tamilnews
அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு பெரியபுளியம்பட்டியில் 9 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள கிணற்றில் பெண் இறந்த நிலையில் கிடந்தார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
பிரேத பிரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது.
மேலும் இறந்த பெண் மதுரை சந்தைபேட்டையை சேர்ந்த முத்துபாண்டி மனைவி மேரி என்ற செல்வி (வயது 35) என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து பெண்ணை கொலை செய்த மூக்கன், நாகனை கைது செய்தனர்.
மேலும் முதல் எதிரியான பெரியபுளியம்பட்டியை சேர்ந்த முத்தரசனை தேடி வந்தனர். நீதிமன்றத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த நிலையிலும் தொடர்ந்து தலைமறைவாகி இருந்தார்.
இந்த நிலையில் எஸ்.பி. ராஜராஜன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் கோலியம்மனூர் பகுதியில் மறைந்து இருப்பதாக வந்த தகவலையொட்டி அங்கு சென்று முத்தரசனை 9 ஆண்டுகளுக்கு பின்பு கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்